வெனிசுலா சிறையில் கடுமையான தீ: 70 பேர் பரிதாப பலி

  Padmapriya   | Last Modified : 29 Mar, 2018 11:58 am

வெனிசுலாவில் உள்ள வாலன்சியா நகர சிறையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 70 பேர் பரிதாபமாக பலியாகினர். வெனிசுலாவில் உள்ள வாலன்சியாவின் சிறையில் இருந்த கைதிகள் சிலர், தப்பித்து ஓடும் நோக்கத்தோடு போர்வைகளுக்கு தீயை பற்ற வைத்ததே தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் என முதற்கட்டத் தகவல் தெரிவிக்கிறது. தீ மளமளவெனப் பரவியதில் சிக்கி வெளிவர முடியாமல் 70 பேர் பலியானதாக தெரியவந்துள்ளது.

வன்முறையும் துப்பாக்கிச்சூடும் விபத்தை அடுத்து, சிறைவாசிகளின் உறவினர்கள், சிறைக்கு வெளியே வன்முறையில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் ஒரு போலீஸாரையும் சுட்டுக் கொன்றனர். இதனை அடுத்து கண்ணீர் புகை குண்டு வீசி அந்த கும்பல் கலைக்கப்பட்டது. விபத்தால் வெனிசுலாவே சோகத்தில் மூழ்கியுள்ளது. வெனிசுலாவில் அதிக அளவில் சிறை கைதிகள் உள்ளனர். பெரும்பாலும் ஆயுதங்கள் மற்றும் போதை பொருள் கடத்தல் போன்ற குற்றச்செயல் செய்த கைதிகளே அங்கு அதிகம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close