வீக்லி நியூஸுலகம்: மருத்துவத்தால் பிழைத்த இரட்டை குழந்தைகள் மற்றும் இயற்கையாய் பிறந்த கழுதைவரிகுதிரையும்!

  Padmapriya   | Last Modified : 10 Nov, 2018 01:41 pm

interesting-world-news-happenings-around-the-world

உயிர் பிழைத்த பூடான் இரட்டை குழந்தைகள் 

பூடான் நாட்டை சேர்ந்தவர் பூம்சு ஜாங்மோ. இந்த பெண்ணுக்கு 15 மாதங்களுக்கு முன்னர் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. ஆனால் அவை வயிற்றால் ஒட்டிப்பிறந்தன. நிமா, தவா என்று பெயரிட்டு வளர்க்கப்பட்டு வந்த இந்தக் குழந்தைகள், எதைச்செய்தாலும் சேர்ந்தே செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. 

இதனால் சிரமப்பட்டு வந்தனர். இந்த நிலையில், ஒரு தொண்டு அமைப்பின் உதவியுடன் அந்தக் குழந்தைகள் தங்களது தாயுடன், அறுவை சிகிச்சைக்காக ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்குள்ள ராயல் குழந்தைகள் ஆஸ்பத்திரியில் அவர்கள் சேர்க்கப்பட்டனர். 

அவர்களுக்கு டாக்டர் ஜோ கிராமெரி தலைமையில் 18 மருத்துவ நிபுணர்கள் 2 குழுவினராக பிரிந்து 6 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்தனர். முடிவில் குழந்தைகள் இருவரும் வெற்றிகரமாக தனித்தனியே பிரித்தெடுக்கப்பட்டனர். இந்த குழந்தைகள் வயிறு ஒட்டிப்பிறந்ததுடன், கல்லீரலும் இணைந்தே இருந்தது குறிப்பிடத்தக்கது. 

அறுவை சிகிச்சைக்கு பின்னர் குழந்தைகள் நலம் அடைந்து வருகின்றனர். அறுவை சிகிச்சை செய்த டாக்டர் ஜோ கிராமெரி கூறும்போது, ‘‘ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகளை வெற்றிகரமாக பிரித்து விட்டோம் என்று அவர்களின் தாயாருக்கு தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைந்தோம். நம்பிக்கையுடன்தான் இந்த அறுவை சிகிச்சையை செய்தோம். இப்போது அது வெற்றி பெற்றிருக்கிறது. அவர்கள் முழுமையாக குணம் அடைவதற்கு நல்ல வாய்ப்பு உள்ளது'' என்றார். 

தொடர்புடையவை: அறுவை சிகிச்சையை எதிர்கொள்ளும் ஓட்டிப் பிறந்த இரட்டையர்கள்  

சவுதியால் மற்றொரு பத்திரிகையாளரும் படுகொலை!

சவுதி மன்னர் சல்மானின் முடியாட்சியை பற்றி கடுமையாக விமர்சித்து வந்த அந்த நாட்டின் பத்திரிகையாளர் ஜமால் கஷோகி சமீபத்தில் இஸ்தான்புலில் உள்ள சவுதி அரேபிய துணை தூதரகத்தில் சவுதி அரேபிய ஏஜெண்டுகளால் கொல்லப்பட்டார். ஆனால் இந்தக் குற்றச்சாட்டை இதுவரை சவுதி அரேபியா மறுத்து வந்தது. பின்பு, வேறு வழியின்றி ஒப்புக்கொண்டது. 

இது ஒரு சர்வதேச கண்டனத்தை ஏற்படுத்தியதுடன்  மேற்கு நாடுகளுடனான உறவுகளுக்கு சவுதி அரேபியாவுக்கு நெருக்கடி அளித்து உள்ளது.  இந்த விவகார முடிவதற்கு முன் மற்றொரு விவகாரமும் சவுதி அரேபியாவுக்கு எதிராக எழுந்து உள்ளது.

இந்த நிலையில் காவலில் வைக்கப்பட்டிருந்த பத்திரிகையாளர் துருக்கியின் அப்துல் அஜீஸ் அல்-ஜசீர் கொடுமைப்படுத்தி கொல்லபட்டார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.  அல்-ஜசீர் சமூக வலைதளத்தில் சவுதி அரச குடும்பத்தின்   உயர்மட்ட உறுப்பினர்களால் நடத்தப்பட்ட மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்தி வந்ததாக மத்திய கிழக்கு கண்காணிப்பகம் அரபு ஊடகங்கள் மேற்கோளிட்டு தெரிவித்துள்ளது.

அல்-ஜசர் கடந்த மார்ச் மாதம் துபாயில் வைத்து கைது செய்யப்பட்டார். மார்ச் மாதம் சவுதி அரேபியாவால் அல்-ஜசீர் வலுக்கட்டாயமாக கைது செய்யபட்டார். மனித உரிமை ஆர்வலர் யஹ்யா அஸிரி நியூ அரப்  மீடியாவிடம் தெரிவித்துள்ளார். 

அஸிரி, அல்குஸ்ட் (ALQST) மனித உரிமைகள் அமைப்பின் நிறுவனர் ஆவார். இவர்  இங்கிலாந்தில் வசித்து வருகிறார். அங்கு அரசியல் தஞ்சம் பெற்றார்.

இது கழுதையா..? வரிக்குதிரையா..? 

இங்கிலாந்தில் உள்ள சமர்செட் பகுதியில் உள்ள டர்னர் என்பவரது பண்ணையில் 6 கழுதைகளுடன் தங்க வைக்கபட்ட வரிக்குதிரை ஒன்று ஈன்றுள்ள புதுமையான குட்டி அனைவரையும் கவர்ந்து வருகிறது. 

உடல் முழுவதும் தந்தையான கழுதை போலவும், கால் பகுதிகளில் தாய் போன்று வரி, வரியான கோடுகளையும் கொண்டுள்ள இதற்கு ஜிப்பி (zippy) என பெயரிடப்பட்டுள்ளது. இயற்கையான முறையில் பிறந்துள்ள இந்த குட்டியின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

கல்லறையில் 2,000 ஆண்டுகள் பழமையான மது!

மத்திய சீனாவின் ஹெனான் மாகாணத்திலுள்ள பண்டைய கல்லறையிலிருந்து சுமார் 2,000 ஆண்டுப் பழமையான 3.5 லிட்டர் மது கண்டறியப்பட்டிருக்கிறது. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தோண்டியெடுத்த வெண்கலப் பானைக்குள் இந்த மது இருந்தது. முதற்கட்ட ஆய்வில் இது அரிசியில் தயாரிக்கப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது. இதற்கு முன்பு கண்டெடுக்கப்பட்ட மது வகைகளும்கூட அரிசி, சோள தானியங்களால் தயாரிக்கப்பட்டவையே. விதவிதமான வண்ணம் பூசப்பட்ட களிமண் பானைகளும், வெண்கலக் கலைப்பொருட்களும் கிடைத்திருக்கின்றன. காட்டு வாத்து வடிவிலான விளக்கு, ஆராய்ச்சியாளர்களை வெகுவாகக் கவர்ந்திருக்கிறது. 2,000 ஆண்டுகளுக்கு முன்பான பண்டைய சீனர்களின் இறுதிச்சடங்குகள் எந்தவிதமாக இருந்திருக்கும் என்பதை அறியும்பொருட்டு, இந்த ஆராய்ச்சியில் தீவிரம் காட்டிவருகிறார்கள் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்.

27 கோடி ரூபாய்க்கு ஏலம் போன ஸ்டீபன் ஹாக்கிங் சக்கர நாற்காலி 

இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல விஞ்ஞானியும், இயற்பியல் ஆய்வாளருமான ஸ்டீபன் ஹாக்கிங் தனது 21வது வயதில் தசையிழப்பு நோயால் பாதிக்கப்பட்டதால் உடல் உறுப்புகள் செயலிழந்தன. பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட சக்கர நாற்காலியில் வலம் வந்த அவர், தான் பேச விரும்பியதை கணினி மூலம் கூறினார்.

கடந்த மார்ச் மாதம் தனது 76வது வயதில் ஸ்டீபன் ஹாக்கிங் காலமானதை அடுத்து, அவர் பயன்படுத்திய தானியங்கி சக்கர நாற்காலி லண்டனில் ஏலம் விடப்பட்டது. அதை, இந்திய மதிப்பில் 27 கோடி ரூபாய்க்கு ஒருவர் ஏலம் எடுத்தார். இந்தத் தொகை எதிர்பார்த்தை விட இரு மடங்கு அதிகம் என கிறிஸ்டி ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.

Newstm.in 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.