சோமாலியா: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 50 ஆக அதிகரிப்பு

  டேவிட்   | Last Modified : 11 Nov, 2018 12:24 am
50-dead-in-somalia-bomb-blast

 சோமாலியாவில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது. 

சோமாலியா தலைநகர் மொகடிஷுவில் உள்ள சஹாபி உணவகம் அருகே கடந்த வியாழக்கிழமை அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. 3 கார்களில் வைக்கப்பட்டிருந்த குண்டுகள் வெடித்து சிதறியது.

இந்த தாக்குதலில் பொதுமக்கள், பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் என மொத்தம் 20 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர் என முதல்கட்டமாக தகவல் வெளியானது. மேலும் பலர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த தாக்குதலுக்கு அல் ஷபாப் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், குண்டு வெடிப்பில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளதாகவும், 58 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் அந்நாட்டு போலீசார் தெரிவித்துள்ளனர்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close