முனைவர் பட்டதாரிகளுக்கு மட்டும் முன்னுரிமை: ட்ரம்ப் அரசு ஆலோசனை 

  Newstm Desk   | Last Modified : 11 Nov, 2018 01:05 pm
trump-wants-h-1b-visas-in-more-highly-skilled-as-opposed-to-outsourcing-roles-white-house

தொழில்நுட்ப படிப்புகளில் முனைவர் பட்டம் பெற்ற வெளிநாட்டவர்களுக்கு மட்டும் ஹெச் 1பி விசா வழங்கப்பட வேண்டும் என்று குடியுரிமை முகமையிடம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆலோசித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

திறன்மிக்க வெளிநாட்டவர்களுக்கு மட்டுமே ஹெச் 1பி விசா வழங்கப்படுவதை உறுதிபடுத்தும் வகையில் குடியுரிமை நடைமுறையில் சில திருத்தங்களை அமெரிக்க அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அதன்படி தொழில் நுட்ப படிப்புகளில் முனைவர் பட்டம் பெற்ற வெளிநாட்டவர்களுக்கு மட்டுமே விசா வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ஏற்கெனவே விசா நடவடிக்கைகளில் பல கிடுக்குபிடி சீர்திருத்தங்களை மேற்கொண்டு வரும் ட்ரம்ப் அரசால் அங்கு பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்கள் பதற்றத்தில் உள்ளனர். அமெரிக்காவில் அதிகப்படியான தொழில்நுட்ப துறைகளில் இந்தியர்கள் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. 

Newstm.in 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close