காங்கோவில் எபோலா நோயால் 200 பேர் பலி 

  Newstm Desk   | Last Modified : 12 Nov, 2018 10:02 am
ebola-death-toll-in-dr-congo-tops-200

காங்கோ நாட்டில், எபோலா வைரஸ் நோயின் தாக்கம் தீவிரமாக உள்ளது. அதன் பாதிப்பிந காரணமாக 200 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர்.

ஆப்பிரிக்க நாடுகளுள் ஒன்றான காங்கோவில் எபோலா வைரஸ் நோய் தீவிரமாக பரவி வருகிறது. இந்த நோயினால் அங்கு 200-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இதுவரை 298 பேருக்கு கடும் காய்ச்சல் இருப்பது தெரியவந்துள்ளது. அதில் 263 பேருக்கு எபோலா வைரஸ் தாக்கி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 35 பேருக்கு சந்தேகத்தின் அடிப்படையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

நோய் தாக்கம் அதிகம் இருக்கும் வடக்கு கிவு பிராந்தியத்தில் உள்ள பேனி நகரை சேர்ந்தவர்கள், அங்கு 8 லட்சம் பேர் வசித்து வருகிறார்கள். இங்கு நோய் பரவுவதை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.  

இந்த நிலையில், சிகிச்சை அளிக்கின்ற மருத்துவ குழுவினருக்கு அங்குள்ள ஆயுதம் ஏந்திய கிளர்ச்சியாளர்கள் தொல்லை கொடுத்து வருவதாக அந்நாட்டின் சுகாதார துறை அமைச்சர் ஒளி இலுங்கா குற்றம்சாட்டியுள்ளார்.  

காங்கோவில் எபோலா வைரஸ் நோயை எதிர்த்து போராடும நிலையில், அங்கு பாதுகாப்பு பிரச்சினை பெரும் சவாலாக அமைந்துள்ளது என உலக சுகாதார நிறுவன இயக்குனர் டெட்ரஸ் அதனாம் கேப்ரேயெசஸ் கவலைத் தெரிவித்தார்.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close