ஜிம்பாப்வே: ஓடும் பேருந்தில் தீ பிடித்தது! 42 உயிரிழப்பு

  Newstm Desk   | Last Modified : 17 Nov, 2018 09:54 am
more-than-40-killed-in-zimbabwe-bus-accident

ஜிம்பாப்வே நாட்டின் மிட்லாண்ட்ஸ் மாகாணத்தில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 42 பேர் வரையில்  உயிரிழந்துள்ளனர். 

ஜிம்பாப்வே நாட்டின் மிட்லான்ட்ஸ் மாகாணத்தில் இருந்து தென்னாப்பிரிக்காவில் உள்ள முசினா என்ற பகுதியை நோக்கி பேருந்து சென்றுகொண்டிருந்த்து. இதில் சுமார் 70 பேர் பயணித்தனர். இந்த பேருந்து புலாவயோ- பெய்ட்பிரிட்ஜ் சாலை வழியாக நேற்றிரவு சென்ற போது திடீரென தீப்பிடித்து எரிய துவங்கியது. இந்த விபத்தில் 42 பேர் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

காயமடைந்தவர்களில் சிலர் தீவிர சிகிச்சைப்பிரிவில் உள்ளனர். ஒரு சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close