அல்ஜீரியாவில் 93 சிறுவர்கள் கடத்தல் கும்பலிடமிருந்து மீட்பு 

  Newstm Desk   | Last Modified : 19 Nov, 2018 10:11 am
93-african-children-freed-in-algeria-from-human-trafficking-networks

வெவ்வேறு ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து கடத்தப்பட்ட 93 சிறுவர்கள் அல்ஜீரிய அதிகாரிகளால் மீட்கப்பட்டனர். 

இது குறித்து அல்ஜீரிய காவல்துறை மற்றும் அல்ஜிரிய சமூக உதவி அமைப்பும் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ''அல்ஜீரிய பாதுகாப்புப் படை ஒரு வாரத்திற்குள்ளாக 93 ஆப்பிரிக்க நாடுகளின் சிறுவர்களை மீட்டுள்ளனர். அதில் 60க்கும் அதிகமான சிறுவர்கள் அல்ஜீரியர்கள். இவர்களை சட்டவிரோதமாக செயல்படும் கடத்தல் கும்பல்கள் பிச்சை எடுக்கும் தொழில்களில் ஈடுபடுத்தி வர முயற்சித்துள்ளனர்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அல்ஜீரிய சுற்றுவட்டாரப் பகுதிகளில் 39 சிறுவர்கள் பிச்சை எடுக்க கட்டாயப்படுத்தப்பட்டு நியமித்திருந்ததை 5 நாட்கள் கண்காணித்து அல்ஜீரிய போலீசார் அவர்களை மீட்கும் பணியை மேற்கொண்டதாக அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார். மொத்தமாக மீட்கப்பட்ட 93 சிறுவர்களும் அல்ஜிரிய சமூக உதவி அமைப்பின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களது முழு உடல் மற்றும் மனநலத்துக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

அல்ஜீரியாவில் இந்த ஆண்டு மட்டும் 10,000 சட்டவிரோதமாக குடியேறிகள் தங்கியுள்ளனர். அவர்களில் 7,000 குழந்தைகளும் அடக்கம். 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close