ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் மீலாது நபி கொண்டாட்டத்தில் மத குருமார்கள் கலந்து கொண்டு இருந்தனர் அப்போது திடீரென நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் 50 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் சுமார் 60பேர் காயமடைந்திருக்கலாம் என சுகாதாரத்துறை அமைச்சக அதிகாரி வாஹித் மஜ்ரோ தெரிவித்துள்ளார். மத குருமார்கள் கலந்துகொண்ட இந்த கூட்டத்தில் தாக்குதல் நடந்துள்ளதாக காபூல் போலீஸ் அதிகாரி பஷீர் முஜாகித் கூறியுள்ளார். இதுவரை எந்த தீவிரவாத குழுக்களும் தாக்குதலை தாங்கள் நடத்தியதாக ஒப்புக்கொள்ளவில்லை எனவும், போலீஸ் மற்றும் ராணுவத்தினர் விசாரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.