ஆப்கானிஸ்தான்: தற்கொலைப்படை தாக்குதலில் 50 பேர் உயிரிழப்பு

  டேவிட்   | Last Modified : 21 Nov, 2018 12:15 am
afghanistan-50-dead-by-bomb-suicider

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் மீலாது நபி கொண்டாட்டத்தில் மத குருமார்கள் கலந்து கொண்டு இருந்தனர் அப்போது திடீரென நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் 50 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் சுமார் 60பேர் காயமடைந்திருக்கலாம் என சுகாதாரத்துறை அமைச்சக அதிகாரி வாஹித் மஜ்ரோ தெரிவித்துள்ளார். மத குருமார்கள் கலந்துகொண்ட இந்த கூட்டத்தில் தாக்குதல் நடந்துள்ளதாக  காபூல் போலீஸ் அதிகாரி பஷீர் முஜாகித் கூறியுள்ளார். இதுவரை எந்த தீவிரவாத குழுக்களும் தாக்குதலை தாங்கள் நடத்தியதாக ஒப்புக்கொள்ளவில்லை எனவும், போலீஸ் மற்றும் ராணுவத்தினர் விசாரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close