அந்தமான்: அமெரிக்க சுற்றுலாப்பயணியை கொலை செய்த பழங்குடியின மக்கள்!

  Newstm Desk   | Last Modified : 21 Nov, 2018 04:43 pm
american-found-dead-on-andaman-island-cops-suspect-isolated-tribals

அமெரிக்காவைச் சேர்ந்த சுற்றுலா பயணி அந்தமான் நிகோபார் தீவில் உள்ள ஒரு பழங்குடியின மக்களால் தாக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் ஆலன் சாவ் (27) அந்தமான் நிகோபாருக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்குள்ள செண்டினல் இன தீவுக்குச் சென்ற அவரை அங்குள்ள சென்டினலிஸ் என்ற பழங்குடியின மக்கள் வில் மற்றும் அம்பு கொண்டு தாக்கியுள்ளனர். அவர்கள் இனத்தவர்களை தவிர வேறு யாரும் உள்ளே நுழைந்தால் இதுபோன்று தான் நடக்குமாம். அதாவது அவர்கள் யாரும் வெளி உலகத்தினருடன் எந்த தொடர்பும் இல்லாதவர்கள். இதனால் அந்த பகுதிக்கு சுற்றுலா பயணிகள் யாரும் செல்லக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், தடையை மீறி  ஜான் ஆலன் மீனவர்கள் 7 பேரின் உதவியோடு சென்றதால் தான் தாக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இதுகுறித்து அந்தமான் போலீசார் விசாரணை செய்து அந்தப்பகுதிக்கு செல்ல  ஏற்பாடு செய்துகொடுத்த மீனவர்கள் 7 பேரை கைது செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close