நடுவானில் விமானம்; மதுபோதையில் பயணிகளிடம் பீதியை ஏற்படுத்திய இந்திய வம்சாவளி பெண் கைது!

  Newstm Desk   | Last Modified : 24 Nov, 2018 01:27 pm
drunk-indian-origin-woman-jailed-in-uk-for-mid-air-misbehavior

குடித்துவிட்டுவிமானத்தில் ஏறியதுடன், நடுவானில் விமானம் சென்றுகொண்டிருக்கும் போது, 'நாமெல்லாம் இறக்கப் போகிறோம்' என்று மக்களிடையே பீதியை ஏற்படுத்திய இந்திய வம்சாவளி பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இங்கிலாந்தில் உள்ள லீசெஸ்டரில் வசிப்பவர், கிரண் ஜக்தேவ். இந்திய வம்சாவளி பெண்ணான இவர், ஜெட் 2 என்ற விமானத்தில்  ஸ்பெயினில் உள்ள டெனிரிஃபுக்கு சென்றுவிட்டு இங்கிலாந்து திரும்பினார். இவர் விமானத்தில் ஏறுவதற்கு முன்பாகவே மது போதையில் இருந்துள்ளார். 

விமானத்துக்குள் ஏறிய பின்னும் பீர் பாட்டிலை எடுத்து அவர் குடிக்க ஆரம்பித்தார். இதையறிந்த விமானப் பணிப்பெண்கள் அவரை தடுத்தனர். இருந்தும் அவர் தொடர்ந்து பீர் கேட்கவே, விமான பணிப்பெண்கள் தர மறுத்துள்ளனர். இதனால் கோபமடைந்த அவர், எதிரில் இருந்த இருக்கையை எட்டி உதைத்து, கத்தினார். பின்னர் அழ ஆரம்பித்து விட்டார். அங்கிருந்த விமான ஊழியர் ஒருவர் வந்து அவரை சமாதானப்படுத்தமுயற்சிக்கவே, கிரண் அவரை தாறுமாறாக திட்ட ஆரம்பித்தார். 

உடனே கிரண் அங்கிருந்த பயணிகளிடம், 'நம்மெல்லாம் இறந்துவிடப்போகிறோம்' என்று கூச்சலிட்டுளார். இதனால் பயணிகள் அதிர்ந்தனர். பின்னர் விமான ஊழியர் வந்து அவரை சமாதானப்படுத்த முயற்சித்தார். ஆனால் அவர் கூச்சலிட்டுக்கொண்டே தான் வந்துள்ளார். இறுதியில் விமானம் தரையிறங்கியதும் அவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு ஆறு மாத சிறைத்தண்டனை அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close