வீக்லி நியூஸுலகம்: ஊட்டி விடும் ரோபோவும் தீவிரவாதிகளை துவம்சம் செய்த பாகிஸ்தான் பெண்ணும்

  Padmapriya   | Last Modified : 24 Nov, 2018 06:19 pm

interesting-world-news-happenings-around-the-world

உணவை ஊட்டி விடும்ம் புதிய ரோபோ! 

கடந்த 1936ம் ஆண்டு வெளிவந்த மார்டன் டைம்ஸ் என்ற சார்லி சாப்ளின் படத்தில் நேரத்தை மிச்சப்படுத்த தானாக உணவு ஊட்டி விடும் இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வரும் நகைச்சுவைக் காட்சியைக் நினைத்து சிரிக்காதோர் யாரும் இருந்திருக்க மாட்டார்கள்.

அந்தப் படம் வெளியாகி 86 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆஸ்திரேலியாவில் ஆர்எம்ஐடி என்ற பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள் தானியங்கி உணவை ஊட்டி விடும் இயந்திரத்தைக் கண்டறிந்துள்ளனர். இடுப்போடு கட்டிக் கொள்ளும் வகையில் செய்யப்பட்டுள்ள இந்த ரோபோ நமக்கு உணவூட்டும் நேரத்தை தெரிவித்து விட்டால், சரியான நேரத்திற்கு உணவை ஊட்டி விடும். இதன் மூலம் வேலை பார்த்துக் கொண்டே சாப்பிட முடியும் என்பதால் நேரம் மிச்சமாகும் என்று பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆஃப்கானிஸ்தான் செல்வாரா ட்ரம்ப்? 

ஆஃப்கானிஸ்தானில் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக அமெரிக்கா சார்பில் 14 ஆயிரம் வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்று 2 ஆண்டுகள் ஆகும் நிலையில்  இதுவரை அவர் ஆஃப்கானிஸ்தானுக்குச் சென்றதில்லை.

இந்நிலையில் ஆஃப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க ராணுவத்தினருடன் டிரம்ப் காணொலிக் காட்சியில் உரையாற்றினார். அப்போது அங்கிருந்த விமானப் படைத் தளபதி தன்னை வாஷிங்டனில் சந்திக்குமாறு கூறிய ட்ரம்ப், அல்லது தான் அவரை ஆஃப்கானிஸ்தானில் சந்திக்க வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்தார். 

தீவிரவாதிகளை துவம்சம் செய்த பாகிஸ்தான் பெண் அதிகாரி 

பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள சீன தூதரகத்தின் மீது இந்த வாரம் தீவிரவாதிகள் 3 பேர் துப்பாக்கி, கையெறி குண்டுகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்தினார்கள். அந்தத் தூதரகத்துக்கு பெண்.எஸ்பி. சுஹாய் அஜிஸ் தல்பூர் தலைமையில் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

தீவிரவாதிகள் தாக்கத் தொடங்கியுடன் பெண் எஸ்.பி. சுஹார் அஜிஸ் தல்பூர் தலைமையிலான படையினர் எதிர்த்தாக்குதல் நடத்தினார். இருதரப்புக்கும் இடையே நடந்த தீவிரமான துப்பாக்கிச் சண்டையில் தீவிரவாதிகள் 3 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அந்தத் தீவிரவாதிகள் 3 பேரும் பலூச் கிளர்ச்சிப்படை எனும் அமைப்பைச் சேர்ந்தவர்கள். அவர்களிடம் இருந்து ஏ.கே.47 ரக துப்பாக்கிகள், வெடிகுண்டுகள், கையெறி குண்டுகள், துப்பாக்கி குண்டுகள், உணவுப்பொட்டலங்கள் உள்ளிட்டவற்றை போலீஸார் கைப்பற்றினார்கள்.

தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியவுடன் அவர்களுடன் சண்டையிட்டு அவர்களை சுட்டுக்கொலை செய்த பெண் எஸ்.பி. சுஹார் அஜிஸ் தல்பூருக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக் குவியத்தொடங்கி இருக்கிறது.

பாகிஸ்தானின் சிந்து மாநிலத்தில் உள்ள தாண்டோ முகமது கான் மாவட்டம், தல்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் எஸ்.பி. சுஹார் அஜிஸ் தல்பூர். மிகவும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவரான எஸ்.பி. சுஹார் அஜிஸ் தல்பூர், சிறுவயதில் வறுமையின் காரணமாக உறவினர்களால் ஒதுக்கப்பட்டுள்ளார்

அதன்பின் கடின சூழலில் வளர்ந்து, பள்ளிப்படிப்பு, பட்டப்படிப்பு முடித்து, கடந்த 2013-ம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி போலீஸில் சேர்ந்து பணியாற்றி வருகிறார்.

நிமிர்ந்த பைசா கோபுரம் 

 

இத்தாலி நாட்டில் உள்ள பைசா நகரத்தில் உள்ள சாய்ந்த கோபுரம் உலக அதிசயங்களில் ஒன்றாக திகழ்கிறது. இந்த கோபுரம் கட்டுமான பணி கி.பி. 1173-ம் ஆண்டு தொடங்கப்பட்டு 1372-ம் ஆண்டு முடிக்கப்பட்டது. 186 அடி உயரத்தில் 7 மாடிகளுடன் இதை கட்டி இருந்தனர்.

கட்டுமான பணிகள் முடிந்ததில் இருந்தே கோபுரம் சிறிது சிறிதாக சாயத் தொடங்கியது. ஆனாலும் அது கீழே விழவில்லை. இதனால் பெரும் அதிசயமாக கருதப்பட்டது. அது விழுந்து விடாமல் தடுக்க பல்வேறு முயற்சிகளும் தொடர்ந்து எடுக்கப்பட்டு வந்தன. 1990-ம் ஆண்டு வாக்கில் இது சாய்வது மேலும் அதிகரித்தது. இதனால் எந்த நேரத்திலும் கோபுரம் விழுந்து விடும் என்று பயம் ஏற்பட்டது. அந்த நேரத்தில் சுமார் 15 அடி தூரத்துக்கு கட்டிடம் சாய்ந்து இருந்தது. அதாவது 5.5 டிகிரி கோணத்தில் அதன் சாய்வு அமைந்து இருந்தது.

எனவே, 1990-ல் இருந்து 11 ஆண்டுகளாக அதன் அருகே யாரையும் செல்ல அனுமதிக்கவில்லை. ஆனாலும் கட்டிடத்தை பாதுகாக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டன.  நிபுணர்கள் குழு மூலம் ஆய்வுகளை மேற்கொண்டு தடுக்கும் முயற்சிகளை செய்தனர். இதனால் கட்டிடம் மேலும் சாய்வது நிறுத்தப்பட்டது. அத்துடன் கொஞ்சம் கொஞ்சமாக அதை நிமிர்த்தும் பணிகளும் நடந்தன. இதற்காக தனி பாதுகாப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டு இருந்தது. என்ஜினீயர் மைக்கேல் ஜமியோ கோவஸ்கி தலைமையிலான இந்த குழுவினர் தொடர்ந்து கோபுரத்தை நிமிர்த்தும் பணிகளை செய்து வந்தனர். அதன் மூலம் 14 செ.மீட்டர் அளவுக்கு கோபுரம் நிமிர்த்தப்பட்டு இருந்தது.  இப்போது மேலும் 4 சென்டி மீட்டர் அளவுக்கு கோபுரத்தை நிமிர்த்தி உள்ளனர். இதனால் கோபுரம் இன்னும் வலுவாகி இருக்கிறது.

கடல் நீரை காலி செய்த சூறாவளி!- அதிர்ந்த மக்கள்!

இத்தாலியின் தென்மேற்கு நகரான சலெர்னோ கடற்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இரு நாட்களுக்கு முன்பு, இரவு 7.30 மணியளவில் கடற்பகுதியில் மிகப்பெரிய சுழற்காற்று உருவானது. இது பார்ப்பதற்கு கடற்பகுதியையும், விண்ணையும் இணைப்பது போல் காணப்பட்டது. இந்த சுழற்காற்று மெல்ல நகர்ந்து துறைமுகத்தில் இருந்த கண்டெய்னர்களை தூக்கி வீசியது. இதனால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

இதனை அப்பகுதி மக்கள் வீடியோ எடுத்துள்ளனர். அதன் வேகம் மிகவும் ஆக்ரோஷமாக இருந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இந்தக் காட்சி நம்ப முடியாத வகையில் இருப்பதாக பதிவிட்டு வருகின்றனர். மேலும் கடல் காற்றை அப்படியே உறிஞ்சி எடுப்பது போன்று இருப்பதாகவும் சிலர் குறிப்பிட்டுள்ளனர்.

கடலின் மேற்பகுதியில் இருக்கும் வறட்சியை பூர்த்தி செய்ய, உடனடியாக மேலெழும் காற்றால் இதுபோன்ற சுழற்காற்று ஏற்படுவதாக அறிஞர்கள் 

Newstm.in 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.