டான்சானியாவில் 13 இந்தியர்களுக்கு 6 மாத சிறை விதிப்பு!

  Newstm Desk   | Last Modified : 26 Nov, 2018 05:03 am
13-indians-sentenced-to-6-months-jail-in-tanzania

இந்தியாவில் இருந்து  டான்சானியா நாட்டுக்கு வேலைக்காக சென்ற 13 பேர், சட்டவிரோதமாக அந்நாட்டிற்குள் நுழைந்ததாக குற்றம் சாட்டப்பட்டு, 6 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக, இந்திய ஆட்கடத்தல் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. 

இந்தியர்கள் 13 பேர், மரவேலை செய்வதற்காக, கடந்த அக்டோபர் மாதம் டான்சானியா நாட்டுக்கு அழைத்து செல்லப்பட்டனர். அதிக சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி, அவர்களிற்கு ஏஜென்ட் அழைத்து சென்றதாக தெரிகிறது. ஆனால், டான்சானியா விமான நிலையத்திற்கு வந்தவுடன் அவர்களை அதிகாரிகள் கைது செய்தனர். போலி ஆவணங்களை வைத்து அவர்கள் அழைத்து வரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்களில் 8 பேர் மேற்கு வங்கத்தின் நாடியாவை சேர்ந்தவர்கள் ஆவார்கள். 

இதைத் தொடர்ந்து இந்திய அதிகாரிகள், அந்த ஏஜெண்டை கைது செய்தனர். இது தொடர்பாக நடந்து வந்த வழக்கில், 13 பேருக்கும் 6 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close