ஈரானில் கடும் நிலநடுக்கம்; 170 பேர் காயம்

  Newstm Desk   | Last Modified : 26 Nov, 2018 11:15 am
strong-earthquake-in-iran-170-people-injured

ஈரானில், நேற்றிரவு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சுமார் 170 பேர் காயமடைந்துள்ளனர். 

ஈரானின் மேற்கு பகுதியில் ஈராக் எல்லையை ஒட்டியுள்ள கெர்மன்ஷா மாகாணம், சர்போல் இ ஸகாப் அருகே நேற்றிரவு திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியுள்ளது. இந்த பலத்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் இடிந்து விழுந்து சேதமடைந்தன. மேலும் மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் 170 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close