ஈரான் - ஈராக் நிலநடுக்கத்துக்கு காயமடைந்தோர் எண்ணிக்கை 750 ஆனது

  Newstm Desk   | Last Modified : 27 Nov, 2018 10:12 am
over-700-injured-in-iran-earthquake

ஈரான் மற்றும் ஈராக் நாடுகளில் ஞாயிறு அன்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் காயமடைந்தோர் எண்ணிக்கை 750 ஆக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஈரானின் தெற்கு பகுதியில் எகிப்து நாட்டின் எல்லையையொட்டி அமைந்துள்ள கெர்மன்ஷா மாகாணத்தின் சர்போல்-இ-சகாப் நகரில் நேற்று முன்தினம் இரவு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 6.3 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கம் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் இருந்து 163 கி.மீ. தொலைவிலும், ஈரானின் சர்போல்-இ-சகாப் நகரில் இருந்து 20 கி.மீ. தொலைவிலும் பூமிக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.
 
இந்த நிலநடுக்கமானது கெர்மன்ஷா மாகாணத்தால் அங்கு உள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களை கடுமையாக பாதிக்கப்பட்டன. வீடுகள், வணிகவளாகங்கள் உள்ளிட்ட கட்டிடங்கள் பலமாக குலுங்கின. இதனால் பீதியடைந்த மக்கள் வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்களை விட்டு வெளியேறி வீதிகளிலும், திறந்த வெளி மைதானங்களிலும் தஞ்சம் அடைந்தனர்.

பல இடங்களில் வீடுகள் இடிந்து சேதமடைந்தன. மின்கம்பங்கள் சரிந்து விழுந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.  நிலநடுக்கத்தால் 716 பேர் காயம் அடைந்ததாக ஈரான் அரசு தகவல் வெளியிட்டது.

அதே போல இந்த நிலநடுக்கம் ஈராக்கின் குர்திஸ்தானில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது. அங்கு வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் இடிந்து சேதமடைந்தன. இங்கு ஒருவர் பலியானதாகவும் 43 பேர் பலத்த காயம் அடைந்ததாக கூறப்பட்டுள்ளது. 

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் போலீசார் மற்றும் ராணுவத்தினர் தீவிர மீட்பு பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close