சீன ரசாயன தொழிற்சாலையில் வெடி விபத்து: 22 பேர் பலி

  Newstm Desk   | Last Modified : 28 Nov, 2018 09:55 am
blast-kills-22-near-north-china-chemical-plant

வடக்கு சீனாவில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் இன்று ஏற்பட்ட வெடி விபத்தில் 22 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 

சீனாவின் வடக்குப் பகுதியில், தலைநகர் பெய்ஜிங்கில் இருந்து சுமார் 200 கிமீ தொலைவில் உள்ள ஸான்ஜியாகோ (Zhangjiakou) என்ற நகரில் ரசாயன தொழிற்சாலை உள்ளது. உள்ளூர் நேரப்படி அங்கு 00.41 என்ற மணியளவில் தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. 

பின்னர் தீயணைப்புப்படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் மொத்தமாக 22 பேர் பலியாயினர். மேலும் 22 பேர் கயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் 50 லாரிகளும் தீயில் சேதமடைந்துள்ளன. வெடி விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து காவல்துறையினர், அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close