ஜி- 20 : மோடியை சந்திக்கிறார் பிரான்ஸ் அதிபர்

  Newstm Desk   | Last Modified : 01 Dec, 2018 02:38 pm
modi-macron-to-meet-on-g-20

ரஃபேல் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக கா்ங்கிரஸ் தொடர்ந்து குற்றச்சாட்டி வரும் நிலையில், ஜி-20 மாநாட்டுக்கு இடையே, பிரான்ஸ் அதிபர் இமானுவேல்  மெக்ரோன், பிரதமர் நரேந்திர மோடியை இன்று (சனிக்கிழமை) சந்திக்கிறார்.

அர்ஜென்டினாவின் புயினோஸ் ஏரீஸ் நகரில் ஜி- 20 நாடுகளின் உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டின் இடையே அமெரிக்கா, சீனா, ஜப்பான், ரஷியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்து பயங்கரவாதம், உலக வெப்பமயமாதல், பொருளாதார குற்றவாளிகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து பேசி வருகிறார்.

இதன் ஒரு பகுதியாக, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரோன், இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவுள்ளார். இந்தியாவுக்கான பிரான்ஸ் நாட்டின் தூதர் இத்தகவலை உறுதி செய்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டிடமிருந்து இந்தியா ரஃபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்ய மேற்கொண்ட ஒப்பந்தத்தில் பெரிய அளவில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். இந்த நிலையில் இருநாட்டு தலைவர்களும் சந்திக்க உள்ளது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close