சுற்றுச்சூழலுக்குக் கேடு ஏற்படுத்தாத பயோ செங்கற்களை உலகிலேயே முதன்முறையாக சிறுநீர் மூலம் உருவாக்கி தென் ஆப்ரிக்க ஆய்வாளர்கள் சாதனைப்படைத்துள்ளனர்.
சுற்றச்சூழலை பாதுகாக்கும் வகையில் உலகிலேயே முதன்முறையாக சிறுநீர் மூலம் தயாராகும் செங்கற்களை தென் ஆப்ரிக்கா ஆயவாளர்கள் மறுசுழற்சித் திட்ட முறையில் செயலபடுத்தி சாதித்துள்ளது. சுற்றுச்சூழல் சீர்கேடு குறித்து ஐநா அறிக்கையின் அடிப்படையில் கட்டடங்கள் மற்றும் கட்டுமானப் பணிகளின் போது மட்டும் ஏற்படும் நச்சு வாயுவின் வெளியேற்றம் 39% சதவிகிதம்.
இதனால் அடுத்த 40 ஆண்டுகளில் கட்டடங்கள் மூலம் வெளியேறும் நச்சுக்காற்றால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்க தென் ஆப்ரிக்காவில் உள்ள கேப் டவுன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கழிவுநீர் மூலம் மறுசுழற்சி செய்யும் ஆராய்ச்சியை மேற்கொண்டனர்.
இதற்காக தங்களது பல்கலைக்கழகத்தின் கழிவறையில் சிறுநீர் மற்றும் கழிவுநீரை சேகரித்து அதனோடு மணல் மற்றும் யூரீஸ் எனப்படும் பாக்டீரியாவைச் சேர்த்து செங்கற்கள் உருவாக்கி அதில் வெற்றி கண்டுள்ளனர். இந்த சுழற்சி முறையில் செங்கற்கள் தயாரிப்புக்கு ஒரு வார காலம் தேவைப்படுகிறது.
மேலும், இந்த செங்கற்களை பயன்படுத்துவதால் மக்களுக்கு எந்த பாதிப்பும் வராது என ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர். இந்த புதிய மறுசுழற்சி திட்ட கண்டுபிடிப்புக்கு வெறும் மலிவான தொகையே தேவைப்பட்டதாக பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
Newstm.in