பிரதமர் மோடியை இழிவுபடுத்திய அர்ஜென்டினா தொலைக்காட்சி!

  Newstm Desk   | Last Modified : 01 Dec, 2018 06:50 pm
argentinean-tv-makes-fun-of-pm-modi-with-simpsons-charater

ஜி20 மாநாட்டில் கலந்துகொள்ள அர்ஜென்டினா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடியை, அந்நாட்டின் ஊடகம் ஒன்று, 'அப்பு' என்ற கார்ட்டூன் கதாபாத்திரத்துடன் ஒப்பிட்டு இழிவுபடுத்தியது, சமுக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

அமெரிக்காவில் கடந்த 30 ஆண்டுகளாக ஒளிபரப்பப்பட்டு வரும் கார்ட்டூன் தொலைக்காட்சித் தொடர் 'சிம்ப்சன்ஸ்'. இந்த தொடரில், இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்த அப்பு என்ற கதாபாத்திரம் உண்டு. இதனால், அமெரிக்கா போன்ற நாடுகளில், இந்தியர்களை பலர் 'அப்பு' என கிண்டலாக அழைப்பது வாடிக்கை. இந்நிலையில், ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி அர்ஜென்டினா சென்றுள்ள நிலையில், அந்நாட்டின் ஒரு தொலைக்காட்சியில், மோடியை 'அப்பு' என வரவேற்றது சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

பிரதமரின் விமானம் அர்ஜென்டினா தலைநகரில் தரையிறங்கும் காட்சிகளுக்கு அருகே, 'அப்பு' கதாபாத்திரத்தின் புகைப்படத்தை ஒளிபரப்பி, 'அப்பு வந்துவிட்டார்' என கிண்டலடித்தது க்ரோனிகா என்ற தொலைக்காட்சி நிறுவனம். இது சமூக வலைத்தளங்களில் கடும் சர்ச்சையை கிளப்பியது. பலர் அந்த தொலைக்காட்சி இனத்துவேஷமாக நடந்து கொள்வதாக விமர்சித்து கண்டனங்கள் எழுப்பினர்.

அர்ஜென்டினாவை சேர்ந்த பலரே பிரதமர் மோடிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து அந்த தொலைக்காட்சிக்கு கண்டனம் விடுத்தனர். "அர்ஜென்டினாவில் கூட இது ஒரு மோசமான தொலைக்காட்சி தான். இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவிக்கிறோம்" என ஒரு அர்ஜென்டினா நெட்டிசன் எழுதினார். 

க்ரோனிகா என்பது ஒரு காமெடி சேனல் என்றும், மோடி மட்டுமல்லாமல் ஜி20 மாநாட்டிற்கு வந்துள்ள அனைத்து நாட்டின் தலைவர்களையும் அந்த தொலைக்காட்சி கிண்டலடித்தாகவும் அந்நாட்டை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close