பிரதமர் பதவி யாருக்கு? ரணிலுக்கு ஆதரவளிக்கும் இலங்கை அதிபர் சிறிசேன?

  Newstm Desk   | Last Modified : 02 Dec, 2018 01:32 pm
sri-lankan-president-maithripala-sirisena-is-considering-dropping-an-attempt-to-dissolve-parliament

இலங்கை அதிபர் சிறிசேனா, நாடாளுமன்றத்தை கலைப்பதாக அறிவித்ததை இன்று வாபஸ் பெற வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இலங்கை அரசியலில் பல்வேறு குழப்பங்கள் நிலவி வரும் நிலையில், ராஜபக்சே மற்றும் ரணில் அணியினர் பிரதமர் பதவிக்கு போட்டிபோட்டு வருகின்றனர். ஆனால் தற்போதைய நிலைமையில், ரணிலுக்கே பெரும்பான்மை உள்ளது. 

முன்னதாக ரணில் மீதுள்ள கருத்து வேறுபாடு காரணமாக ராஜபக்சேவுக்கு ஆதரவு அளித்த அந்நாட்டு அதிபர் சிறிசேன, மக்களின் பெரும் போராட்டம் மற்றும் அரசியல் குழப்பத்துக்கு பிறகு ரணிலுக்கு ஆதரவளிப்பதாக முடிவெடுத்துள்ளார் என செய்தி வந்தவண்ணம் உள்ளது. 

இந்த நிலையில் நேற்று அந்நாட்டு அதிபர் சிறிசேனா, இலங்கை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் நபருக்கே பிரதமர் பதவி என்று தெரிவித்துள்ளார். 

மேலும், இலங்கை அதிபர் சிறிசேனா, ரணில் விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சியின் 105 உறுப்பினர்களுடன் இன்று அதிகாலை திடீர் ஆலோசனை நடத்தினார். இதில் அதிபர் சிறிசேனாவின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி உறுப்பினர்கள் சிலரும் இருந்தனர். ஆனால் இந்த கூட்டத்தில் ரணில் விக்ரமசிங்கே பங்கேற்கவில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டனர்.

மேலும் இதில் ராஜபக்சேவிற்கு எதிராக முறைப்படி நம்பிக்கையில்லா தீர்மானம் நடக்கும் என்றும் அவர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close