ஜி20 மாநாடு: ட்ரம்ப் - புடின் சம்பிரதாய பேச்சு 

  Newstm Desk   | Last Modified : 02 Dec, 2018 04:42 pm
putin-says-he-and-trump-briefly-discussed-ukraine-naval-confrontation

அர்ஜென்டினாவில் ஜி20 நாட்டின் இடையே ரஷிய அதிபர் புடினுடன் அதிபர் ட்ரம்ப் பேசியதாக அமெரிக்க வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. இதனிடையே இனி அமெரிக்காவுடன் பேச்சுக்கு இடமில்லை என ரஷ்யா அறிவித்துள்ளது. 

அர்ஜென்டினாவில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் ரஷ்ய அதிபர் புடினை சந்திக்க திட்டமிட்டிருந்த நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்த சந்திப்பை கடைசி நேரத்தில் ரத்து செய்து விட்டார். 

இந்நிலையில், மாநாட்டின் நிறைவுநாளான நேற்று நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியின்போது ட்ரம்ப்பும் புடினும் சம்பிரதாய ரீதியில் பேசிக் கொண்டதாக அமெரிக்க வெள்ளை மாளிகை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

விருந்தின்போது ட்ரம்ப் - மெலினியாவும் அமர்ந்திருந்ததை அடுத்து சீன அதிபர் க்சி ஜின்பிங் - அவரது மனைவி பெங் லியுயான் இருந்தனர். அவர்களுக்கு பக்கத்தில் அமர்ந்திருந்த புடினுடன் ட்ரம்ப் சிறிது நேரம் சம்பிரதாயமாக பேசினார் என வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் சாரா சான்டர்ஸ் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் உக்ரைன் விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபரின் கேள்விகளுக்கு புடின் விளக்கம் அளித்ததாக ரஷ்ய செய்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ரஷ்யா, இருதரப்பு பேச்சுவார்த்தையை ட்ரம்ப் ரத்து செய்த பிறகு, அமெரிக்க அரசை தொடர்பு கொண்டு பேசியதாகவும் இருப்பினும், தற்போதைக்கு ட்ரம்ப் - புடின் இடையே பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பில்லை என்றும் ரஷ்யா திட்டவட்டமாக கூறியுள்ளது. 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close