இந்திய நிறுவனங்களின் கருப்பு பணம் குறித்த தகவல்களை அளிக்க சுவிட்சர்லாந்து ஒப்புதல்!

  Newstm Desk   | Last Modified : 03 Dec, 2018 08:51 am
switzerland-agrees-to-share-details-of-2-indian-firms-facing-probes

இந்தியாவின் கோரிக்கைக்கு ஏற்ப, இந்திய நாட்டைச் சேர்ந்த இரு நிறுவனங்கள் சுவிஸ் வங்கியில் சேமித்து வைத்துள்ள கருப்புபணம் குறித்த விபரங்களை சுவிட்சர்லாந்து தர ஒப்புக்கொண்டுள்ளது. 

இந்திய நாட்டைச் சேர்ந்த பலர் ஸ்விஸ் வங்கிகளில் கருப்பு பணத்தை சேமித்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது. தற்போது அதை பற்றிய தகவல்களை பெறுவதற்காக, அந்நாட்டு அரசுடன் இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவை சேர்ந்த ஜியோடெசிக் லிமிடெட், ஆதி எண்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய 2 நிறுவனங்கள் மற்றும் ஜியோடெசிக் லிமிடெட் நிர்வாகிகள் பங்கஜ்குமார் ஓங்கார் ஸ்ரீவஸ்தவா, பிரசாந்த் சரத் முலேகர், கிரண் குல்கர்னி ஆகியோரது வங்கி முதலீடுகள் பற்றிய தகவல்களை அளிக்க சுவிட்சர்லாந்து நாட்டின் வரித்துறை ஒப்புக் கொண்டுள்ளது. இவை, இந்தியாவில் மேற்குறிப்பிட்ட நிறுவனங்கள் நிதி மோசடியில் ஈடுபட்டதாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

முன்னதாக, மேற்குறிப்பிட்ட நிறுவனங்கள் மற்றும் குறிப்பிட்ட நபர்கள் இந்தியாவில் செய்த நிதி மோசடிகள் மற்றும் வரி மோசடிகள் குறித்த ஆதாரங்களை சுவிட்சர்லாந்திடம் இந்தியா சமர்ப்பித்தது. இதையடுத்து ஸ்விஸ் வங்கிகளில் அவர்கள் சேமித்து வைத்துள்ள கருப்பு பணம் குறித்த விபரத்தினை அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தது.

அதன்படி, சம்மந்தப்பட்ட நபர்களின் சேமிப்பு குறித்த தகவல்களை அளிக்க சுவிட்சர்லாந்து ஒப்புக்கொண்டுள்ளது. அதே நேரத்தில் அந்நாட்டு அரசின் இந்த முடிவை எதிர்த்து, மேற்கண்ட நிறுவனங்கள் மேல்முறையீடு செய்ய உரிமை உள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close