எங்களை தடுத்தால் யாரும் வர்த்தகம் செய்ய முடியாது: ஈரான்

  Newstm Desk   | Last Modified : 04 Dec, 2018 07:59 pm
rouhani-if-us-blocks-iran-s-oil-exports-will-close-trade-route

தங்களது கச்சா எண்ணெய் ஏற்றுமதியை அமெரிக்கா தடுத்து நிறுத்தினால், வேறு எந்த வளைகுடா நாடுகளும் கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்ய முடியாத அளவு வர்த்தக பாதையை மூடுவோம் என்று ஈரான் மிரட்டல் விடுத்துள்ளது.

ஈரான் அதிபர் ஹசன் ரப்பானி இது தொடர்பாக அந்நாட்டு செய்தியாளர்களிடம் கூறுகையில், ''நாங்கள் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதை அமெரிக்காவால் தடுத்து நிறுத்த முடியாது. அவ்வாறு வளைகுடா நாடுகளின் கடல் பாதையில் ஈரானின் கப்பலைத் தடுக்க முயன்றால், அந்தப் பாதையே அடைக்கப்படும்.

தொடர்ந்து எங்களது கச்சா எண்ணெய் ஏற்றுமதி நடக்கும். அவர்களால் அதனைத் தடுக்க முடியாது. எனினும் ஒரு நாள் எங்களது கச்சா எண்ணெய் ஏற்றுமதியை அவர்கள் தடுக்க எண்ணினால் வேறு யாரும் கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்ய முடியாது. அப்படி தடுத்தால் வேறு எந்த நாடும் எண்ணெய் ஏற்றுமதி செய்ய முடியாது. வளைகுடா நாடுகளின் வழியான ஏற்றுமதி பாதையை நாங்கள் அடிப்போம்'' என்று கூறினார்.

ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறிப்பேன் என்றும் ஈரானுடனான அணு ஆயுத ஒப்பந்தம் பைத்தியக்காரத்தனமானது என்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவியேற்றது முதல் கடுமையாக விமர்சித்து வந்தார்.

அதே போல ஈரானுடனான ஒப்பந்தத்திலிருந்து விலகிய அமெரிக்கா விலகினாலும், ஆனால் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்த பிற நாடுகள் ஈரானுக்கு ஆதரவு தெரிவித்தன. ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து வெளியேறியவுடன் அந்த நாட்டின் மீது பொருளாதரத் தடைகளை அமெரிக்கா விதித்து வருகிறது.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close