கியூபாவுக்கு விடிவுகாலம் பிறந்தது! நாளை முதல் இணையசேவை

  ஐஸ்வர்யா   | Last Modified : 05 Dec, 2018 07:04 pm
cuba-to-finally-get-mobile-internet-access

கியூபாவில் பொதுமக்களின் மொபைல் போன்களுக்கு முழுமையான இணைய வசதி, நாளை முதல் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இணைய சேவை முழுமையாக கிடைக்காத நாடுகளின் பட்டியலில் உள்ளது கியூபா. இணையசேவை, கியூபா பொதுமக்களுக்கு எட்டாக்கனியாகவே உள்ளது. 2013ஆம் ஆண்டு வரை கியூபாவில் குறிப்பிட்ட சில அரசு சார்ந்த ஊழியர்களுக்கு மட்டும் இதுவரை செல்போனில் இணையதள சேவை வழங்கப்பட்டிருந்தது. அதன்பிறகு  பத்திரிகை, ஊடகத்தினர் உள்ளிட்ட குறிப்பிட்ட அரசு சார் துறையில் இருப்பவர்களுக்கு மட்டும் செல்போன்களில் இணைய சேவையை அந்நாட்டு அரசு வழங்கியது. இதையடுத்து கடந்த 2014-ம் ஆண்டு அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா-கியூபா அதிபர் ராவுல் கேஸ்ட்ரோவுடன் ஏற்பட்ட சமாதான உடன்படிக்கையைத் தொடர்ந்து இணைய சேவை வசதி விரைவாக கிடைக்கும் என்ற நம்பிக்கை எழுந்தது. இந்நிலையில் 2018 ஆம் ஆண்டுக்குள் அனைத்து மக்களின் செல்போன்களுக்கு இணையவசதி வழங்கப்படும் என அந்நாட்டு அதிபர் அறிவித்திருந்தார். 

இந்நிலையில், நாளை முதல் கியூபாவில் பொதுமக்களின் மொபைல் போன்களுக்கு 3ஜி இணைய சேவை முழுமையாகக் கிடைக்கும் என அந்நாட்டு அரசின் தொலைத் தொடர்பு நிறுவனத்தின் தலைவர் அறிவித்துள்ளார். இருப்பினும் அமெரிக்க நிதியுதவி பெறும் சில இணையதளங்கள் போன்ற சில குறிப்பிட்ட இணையதளங்களும் தடை செய்யப்பட்டுள்ளன.
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close