ஈரான்:  தற்கொலைப்படைத்  தாக்குதலில் 2 போலீசார் உயிரிழப்பு; 50பேர் படுகாயம்

  டேவிட்   | Last Modified : 07 Dec, 2018 11:13 am

rare-suicide-car-bombing-in-iran-kills-at-least-two-50-injured

ஈரானில் சபாஹர் நகரில் தற்கொலைப்படையினர் நடத்திய கார் வெடிகுண்டு தாக்குதலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த 2 போலீசார் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். 

ஈரான் நாட்டின் சபாஹர் துறைமுக நகரில் உள்ள போலீஸ் தலைமையகத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் நேற்று ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென அங்கு வந்த  பயங்கரவாதி ஒருவன், கார் வெடிகுண்டை வெடிக்க செய்துள்ளான். 

இந்த தாக்குதலில் பணியில் ஈடுபட்டிருந்த 2 போலீசார் பரிதாபமாக உயிரிழந்தனர்.  மேலும், பெண்கள், குழந்தைகள் உட்பட 50க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close