இத்தாலி நைட் கிளப்பில் கூட்ட நெரிசல்: 5 குழந்தைகள் மற்றும் ஒரு பெண் பலி!

  Newstm Desk   | Last Modified : 08 Dec, 2018 05:56 pm

six-dead-and-dozens-hurt-in-nightclub-stampede-in-italy

இத்தாலியில் இரவு விடுதியில் நேற்று நடந்த இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலியாகினர். மேலும், 100க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

இத்தாலியில் உள்ள கரினால்டோ நகரில் உள்ள லண்ட்டார்னா அஸுரா நைட் கிளப்பில் (Lanterna Azzurra nightclub) நேற்று பிரபல இசையமைப்பாளர் பெரா எபஸ்தா கலந்து கொண்ட இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் மற்றும் அவரது ரசிகர்கள் கலந்துகொண்டனர்.

இந்நிலையில், அந்த கூட்டத்தில் பெப்பர் ஸ்பிரே அடித்ததாகவும், அதனால் தீ பிடித்துவிட்டது என்ற வதந்தி பரவியது. இதனால் அங்கிருந்த அனைவரும் தங்களது உயிரை காப்பற்றிக்கொள்ள அங்கும் இங்குமாக ஓடினர். இதனால் அங்கு கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. 

இந்த கூட்ட நெரிசிலில் சிக்கி சுமார் 6 பேர் வரையில் பலியாகினர். அதில், ஐந்து பேர் குழந்தைகள் என தகவல் வெளியாகியுள்ளது. இதில் 3 பெண் குழந்தைகள், 2 பெண் குழந்தைகள். மற்றொருவர் 39 வயதுடைய பெண். தனது மகளுடன் இசை நிகழ்ச்சியில் பங்கேற்க அவர் வந்துள்ளார்.

மேலும் இந்த நெரிசலில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் 10க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 

newstm.in

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.