பிரான்சில் தொடரும் போராட்டம்: 1,385 பேர் கைது!

  Newstm Desk   | Last Modified : 09 Dec, 2018 03:06 pm
1-385-yellow-vest-protesters-arrested-across-france

பிரான்ஸ் நாட்டில் பாரிஸ் நகரில் பெட்ரோல், டீசலுக்கு வரிகளை உயர்த்தியதை கண்டித்து தீவிர போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தில் நேற்று முதல் 1300 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

பிரான்ஸ் நாட்டில் பாரிஸ் நகரில் பெட்ரோல், டீசலுக்கு வரிகளை உயர்த்தியதை கண்டித்து 'எல்லோ வெஸ்ட்' (yellow vest) என்ற பெயரில் தீவிர போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால், பாரிஸ் நகரின் பல்வேறு இடங்களில் பதற்றமான சூழல் நிலவுவதால் போலீஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

மேலும், பாரிஸில் உள்ள புகழ் பெற்ற ஈபிள் கோபுரம் உள்ளிட்ட சுற்றுலா தளங்களுக்கும் செல்ல நேற்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து எதிர்பார்த்தது போல் பாரிஸ் நகரில் நேற்று போராட்டம்  தீவிரமடைந்தது. போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி போராட்டக்கார்களை தடுத்து வருகின்றனர். 

இந்த சூழ்நிலையில், போலீசாரின் கட்டுப்பாட்டையும் மீறி, போராட்டம் நடத்திய நபர்கள் கைது செய்யப்பட்டனர். இதுவரை 1385 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த போராட்டக்களத்தில் சிக்கி 135 பேர் காயமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close