ஈரான் சபாஹர் துறைமுகத்தில் தற்கொலைப்படை தாக்குதல்: 4 பேர் கைது!

  Newstm Desk   | Last Modified : 09 Dec, 2018 03:10 pm
iran-arrests-4-suspects-in-chabahar-suicide-bombing

ஈரானில் சபாஹர் துறைமுகப் பகுதியில் தற்கொலைப்படையினர் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த 4 போலீசார் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் போலீசார் 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரான் நாட்டின் சபாஹர் துறைமுக நகரில் உள்ள காவல்துறை தலைமையகத்தில் டிசம்பர் 6ம் தேதி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென அங்கு வந்த வாகனத்தில் இருந்த வெடிகுண்டு வெடித்தது. இந்த தாக்குதலில் முதற்கட்டமாக இரண்டு போலீசார் உயிரிழந்ததாக சொல்லப்பட்ட நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. 

மேலும், இந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 50 பேர் வரையில் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில் 4 பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த தாக்குதலின் பின்னணியில் வெளிநாட்டினர் பலர் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close