அந்த பேச்சுக்கே இடமில்லை: ஈரான் திட்டவட்டம்

  Newstm Desk   | Last Modified : 16 Dec, 2018 05:10 pm
missile-program-non-negotiable-iran-s-foreign-minister

ஏவுகணை சோதனைகளை கைவிடுவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று  ஈரான் மீண்டும் திட்டவட்டமாக கூறியுள்ளது. 

கத்தார் தலைநகர் தோஹாவில்  நடைபெறும் தோஹா 2018 உச்சி மாநாட்டில் பங்கேற்க, ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் முகமது ஜாவித்  செரிஃப் அங்கு சென்றுள்ளார்.

முன்னதாக அவர் ஈரான் தலைநகர் டெஹ்ரானில் செய்தியாளர்களிடம் கூறியது:

தற்காப்புக்காகவும், பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாகவும் தான் எங்கள் நாடு ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. மேலும், வளைகுடா பிராந்தியத்தில் உள்ள பிற நாடுகளை ஒப்பிடும்போது, ஈரான் தனது பாதுகாப்பை பலப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.

எனவே, ஏவுகணை பரிசோதனைகளை கைவிடுவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று செரிஃப் திட்டவட்டமாக கூறினார்.

முன்னதாக, ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானத்தை மீறி, ஈரான் தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது என அமெரிக்கா குற்றம்சாட்டியிருந்தது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close