மூன்று நாட்கள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள மாலத்தீவு அதிபர்! இன்று பிரதமர் மோடியை சந்திக்கிறார்

  Newstm Desk   | Last Modified : 17 Dec, 2018 09:30 am
maldivian-president-arrives-for-three-day-visit

மாலத்தீவுகளின் புதிய அதிபராக பதவியேற்றுள்ள இப்ராஹிம் முகமது சோலிஹ், மூன்று நாட்கள் அரசு முறைப் பயணமாக இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார். இவர் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிகாரிகளை சந்தித்து இரு நாடு உறவுகள் மற்றும் வர்த்தகம் குறித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். 

மாலத்தீவு நாட்டின் புதிய அதிபராக கடந்த மாதம் 17ம் தேதி இப்ராஹிம் முஹம்மது சோலிஹ் பதவியேற்றார். சோலிஹ்-இன் அழைப்புக்கேற்ப இவ்விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். அந்த சமயத்தில் இந்தியாவுக்கு வருமாறு  சோலிஹ்-க்கு மோடி அழைப்பு விடுத்திருந்தார்.

அந்த அழைப்பினை ஏற்று, மூன்றுநாள் அரசுமுறைப்பயணமாக முஹம்மது சோலிஹ் நேற்று இந்தியா வந்துள்ளார். இன்று சோலிஹ், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். இரு நாடுகளுக்கு இடையேயான நட்புறவு மற்றும் பொருளாதாரம் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதிபராக பதவி ஏற்ற பின்னர் சோலிஹ்-இன் முதல் வெளிநாட்டு பயணமாக அவர் இந்தியாவுக்கு வருவது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close