எகிப்தில் 4,400 ஆண்டுகளுக்கு முந்தைய பிரமீடுகளுடன் கூடிய கல்லறை கண்டுபிடிப்பு!

  Newstm Desk   | Last Modified : 17 Dec, 2018 01:00 pm
4-400-year-old-tomb-discovered-in-egypt

எகிப்து தலைநகர் கெய்ரோவில் சுமார் 4,400 ஆண்டுகள் பழமையான பிரமீடுகள் கொண்ட கல்லறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எகிப்து நாட்டில் தலைநகர் கெய்ரோ அருகில் புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் பழமையான புதைபொருட்கள் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆராய்ச்சியில் 4,400 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான பிரமீடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கல்லறை, கெய்ரோவில் உள்ள சக்காரா பிரமிட் வளாகம் அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கல்லறை, அங்கு வாழ்ந்த 'வாட்யே' என்னும் அரச குருவுக்கு உரியது என தெரியவந்துள்ளது. அந்தக் கல்லறையில் பல்வேறு அழகிய ஓவியங்கள், சிற்பங்கள் உள்ளன. மேலும், அரசகுரு மற்றும் அவரது குடும்பத்தினரின் சிலைகளும், பல்வேறு கல்வெட்டுகள் காணப்படுகின்றன. அரசகுரு இந்த இடத்தில் புதைக்கப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. 

எகிப்து ஆராய்ச்சியாளர்கள் இதுகுறித்து தொடர்ந்து ஆராய்ச்சி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதன்மூலம் அரச குடும்பத்தினர் மற்றும் பழமையான நிகழ்வுகள் குறித்த தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close