நேபாள பேருந்து விபத்து: பலியான சிறுவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்வு!

  Newstm Desk   | Last Modified : 23 Dec, 2018 09:12 am
students-among-23-killed-after-field-trip-bus-falls-into-gorge-in-nepal

நேபாளத்தின் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் பலியான மாணவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. 

மேற்கு நேபாளத்தின் டாங் மாவட்டத்தின் கோராஹி பகுதியில் உள்ள பள்ளியைச் சேர்ந்த சிறுவர்கள் சுற்றுலா சென்றுள்ளனர். சுற்றுலா முடிந்து அவா்கள் திரும்பிய போது, துல்சிபூா் பகுதியில் பேருந்து சென்று கொண்டிருந்த போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே 16 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த பேருந்தில் 34 சிறுவர்கள் உள்பட மொத்தம் 37 பேர் சென்றுள்ளனர். இவர்களில் தற்போது பலியான சிறுவர்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்ததுள்ளது. எஞ்சிய 11 மாணவர்கள் உள்பட 14 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close