இந்தோனேசியாவில் சுனாமி: பலி எண்ணிக்கை 168 ஆக உயர்வு!

  Newstm Desk   | Last Modified : 23 Dec, 2018 01:21 pm
168-people-dead-due-to-tsunami-in-indonesia

இந்தோனேசியாவில் எரிமலை வெடித்ததைத் தொடா்ந்து ஏற்பட்ட சுனாமியில் சிக்கி இதுவரை 168 போ் உயிாிழந்திருப்பதாகவும், 600க்கும் மேற்பட்டோா் காயமடைந்திருப்பதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. 

இந்தோனேசியாவின் சண்டா ஸ்டெரெய்ட் பகுதியில் உள்ள எரிமலை இன்று அதிகாலை திடீரென வெடித்தது. எரிமலை வெடித்து தீக்குழம்புகள் வெளிவந்த நிலையில் சுனாமி ஏற்பட்டது. சுமத்ரா தீவு, ஜாவா கடற்கரைக்கு இடையே ஏற்பட்ட சுனாமியில் சிக்கி கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளைச் சோ்ந்த 63 போ் உயிாிழந்திருப்பதாக அந்நாட்டு பேரிடா் மீட்பு படையினா் தொிவித்துள்ளனா். மேலும் 600க்கும் மேற்பட்டோா் காயமடைந்துள்ளதாகவும், பலரை காணவில்லை என்றும் அவா்கள் தொிவித்துள்ளனா்.

இதையடுத்து தற்போது பலி எண்ணிக்கை 168 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 2004ம் ஆண்டு டிசம்பா் 26ம் தேதி ஏற்பட்ட சுனாமியில் சிக்கி லட்சக்கணக்கானோா் உயிாிழந்தனா். 26ம் தேதிக்கு இரண்டொரு தினங்களே மீதம் உள்ள நிலையில் அதனை நினைவுபடுத்தும் விதமாக தற்போது ஏற்பட்டுள்ள சுனாமியால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனா். மேலும் கடந்த செப்டம்பா் மாதம் இந்தோனேசியாவில் ஏற்பட்ட சுனாமியில் 832 போ் உயிாிழந்த நிலையில் தற்போது மீண்டும் சுனாமி தாக்கியுள்ளது. 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close