இந்தோனேசியாவில் உள்ள எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து, ஏற்பட்ட சுனாமியால், பலியானோர் எண்ணிக்கை தற்போது 281 ஆக அதிகரித்துள்ளது.
இந்தோனேசியாவின் சண்டா பகுதியில் அமைந்துள்ள அனக் கிரகடோவா எரிமலை நேற்று திடீரென வெடித்தது. உள்ளூர் நேரப்படி, நேற்று இரவு 9.30 மணிக்கு நடைபெற்ற இந்த நிகழ்வினால், கடலுக்கு அடியில் ஏற்பட்ட மாபெரும் நிலச்சரிவுகளின் காரணமாக சுனாமி பேரலைகள் எழுந்தன.
எந்த எச்சரிக்கையும் விடுக்கடப்படாததால், உயிர் மற்றும் பொருட்சேதம் அதிகமாகியுள்ளது. பண்டெங்லாங், லம்புங், செராங் ஆகிய பகுதிகளில் பாதிப்பு அதிகமாகியுள்ளது. முக்கியமாக லம்புங் பகுதியில் மட்டும் நேற்று நூற்றுக்கணக்கானோர் இருந்துள்ளதாக இந்தோனேசிய தேசிய பேரிடர் மீட்புப் படை தெரிவித்தது. தற்போது பலியானோர் எண்ணிக்கை 281 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 800 பேர் வரையில் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலரை காணவில்லை எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்புப்பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
newstm.in