திபெத்தில் மிதமான நிலநடுக்கம்

  Newstm Desk   | Last Modified : 24 Dec, 2018 04:40 pm
mild-earth-quake-strikes-tibet

திபெத்தின் தென்மேற்கே ஜிகேஜ் என்ற நகரில் இன்று மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.  இது ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவாகி உள்ளது.


இந்நிலநடுக்கத்தினை அடுத்து அந்த பகுதியில் இருந்த 2,100க்கும் கூடுதலான மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு அப்பகுதியில் இருந்து அவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.  

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர்சேதம் மற்றும் பொருட்சேதம் குறித்து உடனடியாக தகவல்கள் வெளியாகவில்லை.  சில கிராமப்புற வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டன.  கால்நடைகள் அடைக்கப்பட்டிருந்த பகுதிகளும் சேதமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனை அடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உள்ளூர் அரசாங்கம் கூடாரங்கள், போர்வைகள் மற்றும் மருத்துவ வசதிகளை விரைந்து செய்து கொடுத்துள்ளது.
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close