ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்: 29 பேர் பலி

  Newstm Desk   | Last Modified : 25 Dec, 2018 07:54 am
militants-storm-afghan-offices-in-kabul-killing-at-least-29

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் குண்டுவெடிப்பு தாக்குதலில் 29 பேர் பலியாகியுள்ளனர்.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தீவிரவாத தாக்குதல் என்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று காபூலில் உள்ள அரசு அலுவலக கட்டிடத்தில் பயங்கரவாதிகள் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தினர். மேலும், அங்கு குண்டுவெடிப்பு தாக்குதலும்  நடத்தியுள்ளனர்.

பின்னர், அப்பகுதிக்கு வந்த பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகளை நோக்கி தாக்குதல் நடத்தினர். இரு தரப்புக்கும் இடையே தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த தாக்குதலில் பொதுமக்களில் 29 பேர் கொல்லப்பட்டுள்ளனர், மேலும், 20 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close