இத்தாலியில் உள்ள மவுண்ட் எட்னா எரிமலை வெடித்தது

  ஸ்ரீதர்   | Last Modified : 25 Dec, 2018 11:56 am
volcano-erupted-in-sisili-islands

இத்தாலியின் தெற்கு பகுதியில் உள்ள சிசிலித் தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து மவுண்ட் எட்னா எரிமலை வெடிக்கத் தொடங்கியது. 
ஐரோப்பாவின் மிகப்பெரிய எரிமலையான மவுண்ட் எட்னா இத்தாலியின் தெற்கு பகுதியில் சிசிலித் தீவில் உள்ளது. நேற்று ரிக்டர் அளவுகோலில் 3.3 என்ற அளவில் அங்கு லேசனா நிலநடுக்கம் ஏற்பட்டது.

அதனைத்தொடர்ந்து எட்னா எரிமலை வெடிக்கத் தொடங்கியது. இதனால் அங்கு புகைமண்டலம் சூழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் எரிமலை குழம்புகள் பாய்ந்தோடி வருகிறது. எரிமலை வெடிப்பை தொடர்ந்து சிசிலி தீவில் அமைந்துள்ள கட்டானியா விமான நிலையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.  எரிமலை வெடிப்பால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close