மெக்சிகோவின் முதல் பெண் மேயர் ஹெலிகாப்டர் விபத்தில் பலி

  ஸ்ரீதர்   | Last Modified : 25 Dec, 2018 02:20 pm
mexico-women-mayor-dies-in-a-choper-accident

மெக்சிகோ நாட்டில் அமைந்துள்ள பியூப்லா மாகணத்தின் முதல் பெண் ஆளுநராகப் பதவி வகித்து வந்த மார்தா எரிக்கா அலோன்சோ ஹெலிகாப்டர் விபத்தில் பரிதாபமாக  உயிரிழந்தார்.


மேயர் மார்தா எரிக்கா அலோன்சோ பயணம் செய்ய இருந்த ஹெலிகாப்டர் பியூப்லாவிலிருந்து புறப்பட்டது. அவரது கணவரும், செனட் உறுப்பினருமான ரபேல் மொரேனோ , உள்பட நான்கு பேர் மார்தா எரிக்கா அலோன்சோ உடன், அந்த ஹெலிகாப்டரில் பயணம் மேற்கொண்டனர்.

புறப்பட்ட சில நிமிடங்களில் கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை அந்த ஹெலிகாப்டர் இழந்தது. அதன் பின்னர் போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையின்போது அந்த ஹெலிகாப்டர், காட்டுப் பகுதியில் விழுந்து நொறுங்கிக் கிடந்தது கண்டறியப்பட்டது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த ஐந்து பேரும் உயிரிழந்து விட்டதாக மெக்சிகோ அரசு அறிவித்துள்ளது.

இதை உறுதி செய்துள்ள அந்நாட்டின் புதிய அதிபர் ஆண்ட்ரெஸ் மானுவேல் லோபஸ், ஆளுநர் மற்றும் செனட் சபை உறுப்பினரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்வதாக அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close