அழிவை நோக்கி இந்தோனேசியா? தொடரும் எரிமலை வெடிப்பு...விமான சேவை ரத்து!

  Newstm Desk   | Last Modified : 27 Dec, 2018 12:29 pm
indonesia-flights-rerouted-as-volcano-alert-level-raised

இந்தோனேசியாவில் ஜாவா, சுமத்ரா தீவுகளில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பு மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியால் இந்தோனேசிய மக்கள் மிகவும் மீளா துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில், எரிமலை வெடிப்புக்கான எச்சரிக்கை மீண்டும் விடுக்கப்பட்ட நிலையில், இந்தோனேசியாவுக்கு செல்லும் விமானங்கள் வேறு வழியில் மாற்றி விடப்பட்டுள்ளது. 

இந்தோனேசியாவில் கடந்த 23ம் தேதி ஜாவா, சும்த்ரா தீவுகளில் எரிமலை வெடிப்பு நிகழ்ந்தது. இதைத் தொடர்ந்து சுனாமியும் ஏற்பட்டது.  இதனால் இந்தோனேசிய நகரமே முழுவதும் பாதிப்படைந்துள்ளது. சுமார் 400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். சுமார் 1,500 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதுதவிர 22,000 பேரை காணவில்லை எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எரிமலை வெடிப்பு மற்றும் சுனாமியால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்தே இன்னும் அந்நாட்டு மக்கள் மீளாத நிலையில், இந்தோனேசியா வானிலை, புவியியல் அமைப்பு மக்களை எச்சரித்துள்ளது. அனாக் கரஹோட்டா மலையில் எரிமலை வெடிப்புகள் தொடர்ந்து காணப்படும் என எச்சரித்துள்ளது. இதையடுத்து எரிமலையை சுற்றியுள்ள 5 கிமீ தூரத்திற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக இந்தோனேசியாவுக்கு செல்லும் விமானங்கள் சில ரத்து செய்யப்பட்டும், சில மாற்று வழியிலும் திருப்பி விடப்பட்டுள்ளன. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close