குண்டுவெடிப்பில் சுற்றுலா பயணிகள் பலி

  ஸ்ரீதர்   | Last Modified : 29 Dec, 2018 11:09 am
2-vietnamese-tourist-killed-in-giza-blast

எகிப்தின் கிசா பிரமிடுகள் இருக்கும் இடத்துக்கு அருகே குண்டு வெடித்ததில் சுற்றுலா பயணிகள் 2 பேர் பலியாகினர். 

14 வியட்நாம் நாட்டினரை ஏற்றிக்கொண்டு எகிப்திற்கு ஒரு சுற்றுலா பேருந்து சென்று கொண்டிருந்தது. மரியோதியா பகுதியில் உள்ள பிரமிடுகளை நோக்கி பேருந்து வந்தபோது சுவரின் அருகே மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்தது.

இதில் பேருந்தில் பயணம் செய்த 2 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதிறி உயிரிழந்தனர். ஓட்டுநர், வழிகாட்டி உள்பட 12 பேர் படுகாயமடைந்தனர். 

அந்நாட்டில் உள்ள சிறுபான்மை கிறிஸ்தவர்கள் அல்லது தொலைதூரத்தில் உள்ள சர்ச்களுக்கு செல்லும் பேருந்துகள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவது வழக்கம். 

எனினும் கடந்த 2 ஆண்டுகளில் முதல்முறையாக வெளிநாட்டு பயணிகள் மீது தாக்குதல் நடந்துள்ளது. புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெறவுள்ள நிலையில் இதுபோல் தாக்குதலால் சர்ச்களுக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close