அமெரிக்காவால் தான் வளைகுடாவில் பதற்றம்: ஈரான் குற்றச்சாட்டு

  Newstm Desk   | Last Modified : 31 Dec, 2018 08:48 am
us-causing-insecurity-in-gulf-iran

வளைகுடா பகுதிகளில் தமது ராணுவத்தை தொடர்ந்து நிறுத்திவருவதன் மூலம், அமெரிக்கா இங்கு பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது என்று ஈரான் குற்றம்சாட்டியுள்ளது.

இதுதொடர்பாக ஈரானின் ஆயுதப்படை தலைமை அதிகாரி முகமது பக்ரி கூறும்போது,  "ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, குவைத் உள்ளிட்ட  வளைகுடா நாடுகள் தங்களை தற்காத்து கொள்ளும் அளவுக்கு பாதுகாப்பைப் பலப்படுத்திதான் கொண்டுள்ளன. 

இருப்பினும் இந்த பிராந்தியத்தில் அமெரிக்கா தனது ராணுவத்தை தொடர்ந்து நிறுத்தி வருவதன் விளைவாக, வளைகுடா பகுதியில் தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இதுவே அந்த நாட்டுக்கு வாடிக்கையாகிவிட்டது" எனத் தெரிவித்தார்.

முன்னதாக, ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் முகமது ஜாவித்  செரீஃப் கூறும்போது, "வளைகுடா நாடுகளில் அமெரிக்க ராணுவம் சட்டவிரோதமாக இருந்து வருகிறது. அண்மையில் அமெரிக்க விமானப் படை இப்பிராந்தியத்தில் குவிக்கப்பட்டுள்ளது பதற்றத்தை இன்னும் அதிகரித்துள்ளது" என கூறினார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close