உலகின் முதல் புத்தாண்டு கொண்டாட்டம் துவங்கியது!

  ஸ்ரீதர்   | Last Modified : 31 Dec, 2018 08:26 pm
new-zealand-celebrated-new-year

நியூசிலாந்து நாட்டில் உலகிலேயே முதன் முதலில் புத்தாண்டு கொண்டாடப்பட்டது. புத்தாண்டையொட்டி கண்ணை கவரும் வகையில் வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

உலகின் கிழக்கு திசையின் கடைக்கோடியில் ஆஸ்திரேலியா, ஓசியானா கண்டத்தில் பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள நியூசிலாந்து நாடு. உலகில் சூரியன் உதிக்கும் முதல் நாடாக நியூஸிலாந்து உள்ளது. 

இந்நிலையில், இந்திய நேரப்படி இன்று மாலை 4.30 மணியளவில் நியூசிலாந்தில் நள்ளிரவு 12 மணி ஆனவுடன் அந்நாட்டு மக்கள் ஆட்டம், பாட்டம், வானவேடிக்கை என கோலாகலமாக புத்தாண்டை கொண்டாடினர். கண்ணை கவரும் வகையில் நடைபெற்ற வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் காண்போரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

நியூசிலாந்துக்கு அடுத்தபடியாக இந்திய நேரப்படி இன்றிரவு சுமார் 8.30 மணியளவில் ஜப்பான் நாட்டு மக்கள் உலகிலேயே இரண்டாவதாக புத்தாண்டை கொண்டாட உள்ளனர். அதன் பின்னர் சுமார் மூன்றரை மணி நேரத்துக்கு பிறகு நமது நாட்டில் இன்று நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு கொண்டாடப்படவுள்ளது. இந்தியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இடையில் உள்ள நேர வித்தியாசம் நம்மைவிட ஏழரை மணி நேரமாகும்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close