தெற்கு தாய்லாந்து பகுதியில் புயல் சீற்றம்; விமானங்கள் ரத்து !

  ஸ்ரீதர்   | Last Modified : 04 Jan, 2019 02:00 pm
cyclone-alert-to-south-thailand

தெற்கு தாய்லாந்து பகுதியில் புயல் சீற்றம் ஏற்பட்டுள்ளதால் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் நகோன் சி தாமராத் மாகாணத்தில் 80 ஆயிரம் மக்களை வெளியேற்ற அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாய்லாந்தின் தெற்கு கடல்பகுதியில் புயல் நிலைகொண்டுள்ளது. பபுக் என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல், 75 கி.மீ  முதல் 95 கி.மீ. வேகத்துடன் இன்று கரையைக் கடக்கும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதிக மழைப்பொழிவினால் தெற்கு தாய்லாந்து கடற்கரையோரப் பகுதிகளில் பாதிப்பிற்கும், வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளதாலும். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நகோன் சி தாமராத் மாகாணத்தில் 80 ஆயிரம் மக்களை வெளியேற்ற அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்சமயம் 8 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர் என அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close