சிரியாவில் அல் கொய்தா தீவிரவாத தாக்குதல்: 120 பேர் பலி

  ஸ்ரீதர்   | Last Modified : 06 Jan, 2019 11:47 am
120-people-killed-in-syria-in-alqaeda-attack

சிரியாவில் 5 நாட்களில் அல் கொய்தா தீவிரவாத கிளை அமைப்பின் தீவிரவாதிகள் தாக்குதலில் துருக்கி ஆதரவு கிளர்ச்சி படையினர் 120 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே 2011-ம் ஆண்டு தொடங்கிய உள்நாட்டுப்போர் தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கிறது. போரால் குழந்தைகள் உள்பட லட்சக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

அரசுக்கு எதிராக ஐ.எஸ். தீவிரவாதிகளும் உள்நாட்டு போரில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை ஒழிக்க சிரிய அரசுக்கு ஆதரவாக ரஷ்ய படையினரும் வான்வழி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அல் கொய்தா தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடைய ஹயத் தஹ்ரீர் அல் ஷாம் என்ற அமைப்பும், துருக்கி ஆதரவு பெற்ற அல் ஜென்கி என்ற கிளர்ச்சி படையினரும் கடும் மோதலில் ஈடுபட்டு வந்தனர். 

மோதலில் கடந்த 5 நாட்களில் மட்டும் கிளர்ச்சிப்படையை சேர்ந்த 120 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என லண்டனை அடிப்படையாக கொண்ட சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்து உள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close