ஆஸ்திரலேியா- இந்திய தூதரகத்துக்கு வந்த மர்ம பார்சல்

  ஸ்ரீதர்   | Last Modified : 09 Jan, 2019 12:51 pm
australia-suspicious-packages-sent-to-indian-consulate

ஆஸ்திரேலியாவில் உள்ள இந்தியா உள்பட வெளிநாட்டு தூதரகங்களுக்கு வந்த மர்ம பார்சலால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

ஜெர்மனி, இத்தாலி, இந்தியா, ஸ்பெயின் மற்றும் கொரியா ஆகிய நாடுகளின்  தூதரக அலுவலகங்கள் ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள  மெல்போர்னில் உள்ளன. ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய மற்றும் வெளிநாட்டு  தூதரகம், துணை தூதரகங்களுக்கு இன்று வந்த  மர்ம பார்சலால் பரபரப்பு  ஏற்பட்டது.  தூதரகங்களுக்கு மர்மநபர்கள் பார்சல்களை அனுப்பி உள்ளனர். 

இதை தொடர்ந்து மெல்போர்ன், கான்பெராவில் உள்ள தூதரகங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் தீயணைப்பு வீரர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் அதிகாரிகள்  இங்கு முகாமிட்டு உள்ளனர்.

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close