ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதல்- 8 பேர் பலி

  ஸ்ரீதர்   | Last Modified : 13 Jan, 2019 02:54 pm
afghan-8-killed-in-taliban-attack

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் போலீஸ் நிலையம் மீது நடத்திய அதிரடி தாக்குதலில் 8 பாே் உயிரிழந்தனர்.

ஆப்கானிஸ்தானில் உள்ள  ஹீரத் மாகாணம், புலே ரங்கினா பகுதியில் உள்ள போலீஸ் நிலைய வளாகத்தினுள் 3 பயங்கரவாதிகள் நுழைந்தனர்.

காரில் வந்திறங்கிய அவர்கள், போலீஸ் நிலைய வளாகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மற்றும் புகார் கொடுக்க வந்த பொதுமக்களை நோக்கி துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டனர். இதையடுத்து போலீசாரும் பதில் தாக்குதல் நடத்தினர்.

இதில் 3 போலீசார், ஒரு குழந்தை மற்றும் ஒருவர் உயிரிழந்தனர். மேலும் 3 போலீசார் பலத்த காயமடைந்தனர்.

2 மணி நேரம் நீடித்த இந்த துப்பாக்கி சண்டையில் 3 பயங்கரவாதிகளும் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதனையடுத்து அந்த பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு தலிபான் இயக்கம் பொறுப்‌பேற்றுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close