பசிபிக் பெருங்கடலில் உள்ள வானூட்டு தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள வானூட்டு தீவில் அடிக்கடி பூகம்பங்கள், எரிமலை வெடிப்புகள் நிகழ்கின்றன. இந்நிலையில் நேற்று நள்ளிரவு அங்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலநடுக்கம் பூமிக்கடியில் 47கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகவும், ரிக்டர் அளவில் 6.6 ஆக பதிவாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.
newstm.in