கென்யா ஹோட்டலில் புகுந்து தீவிரவாதிகள் தாக்குதல்: 21 பேர் பலி

  Newstm Desk   | Last Modified : 17 Jan, 2019 11:14 am
kenya-attack-21-confirmed-dead-in-dusitd2-hotel-siege

கென்யாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது.

கென்யா தலைநகர் நைரோபியில் அமைந்துள்ள பிரபலமான DusitD2 என்ற ஆடம்பர ஹோட்டலில் தீவிரவாதிகள் நேற்று அதிரடியாக புகுந்து தாக்குதல் நடத்தினர். வெடிகுண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் அவர்கள் நடத்திய தாக்குதலால், மக்கள் அங்கும் இங்குமாக சிதறினர். 

மேலும், ஹோட்டலுக்கு வெளியே நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் அங்கிருந்த வாகனங்கள் எரிந்தன. இதில் அங்கு நின்ற சில மக்களும் பலியாகினர். 

தற்போதைய நிலவரப்படி, இந்த தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 28 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 19 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜிகாதிஸ்ட் தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தி இருக்கலாம் என தெரிகிறது. தொடர்ந்து இப்பகுதியில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. காணாமல் போனவர்களை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close