நைரோபி- அதிபர் டிரம்பின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்குதல்

  ஸ்ரீதர்   | Last Modified : 17 Jan, 2019 12:19 pm
nairobi-attack-retaliation-for-donald-trump-s-jerusalem-move

கென்யா நாட்டு தலைநகர் நைரோபியில் அமைந்துள்ள ஓட்டலில் நேற்று முன்தினம் பயங்கரவாதிகள் சிலர் அதிரடியாக புகுந்து தாக்குதல் நடத்தினர். 

ஓட்டல் வளாகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பிரிந்து சென்ற அவர்கள், துப்பாக்கியால் சுட்டும், வெடிகுண்டுகள் வீசியும் தாக்குதல் நடத்தியதால், பொதுமக்கள் நாலாபுறமும் சிதறி ஓடி ஆங்காங்கே பதுங்கினர். தற்கொலைப்படை தாக்குதலும் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டனர். 

இந்த தாக்குதலுக்கு அல்ஷாப் ஜிகாதி அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர். இது குறித்து அவர்கள் தங்களது வலைதளத்தில், இஸ்ரேலின் தலைநகராக ஜெருசுலேமை அறிவிக்க உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்திருந்தார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தான் இந்த தாக்குதலை நடத்தினோம் என பதிவிட்டுள்ளனர்.
newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close