தேர்தல் முடிஞ்சி 50 நாள் ஆகப்போவுது... இன்னும் பைனல் ரிசல்ட் தெரியல...

  Newstm Desk   | Last Modified : 18 Jan, 2019 01:40 pm
african-union-seeks-delay-in-final-announcement-of-democratic-republic-of-congo-vote-results

ஆப்பிரிக்க நாடான காங்கோவில் நடைபெற்ற அதிபர் தேர்தலுக்கான இறுதி முடிவுகளை அறிவிப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.

காங்கோ நாட்டு அதிபர் தேர்தல் கடந்த டிசம்பர் 30-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.இதில்  ஃபிலீக்ஸ் தஷிகெடி தலைமையிலான எதிர்க்கட்சி, 38.57 சதவீத வாக்குகளை பெற்று வெற்றிப் பெற்றதாக அந்நாட்டின் தேர்தல் ஆணையம் கடந்த 10 -ஆம் தேதி அறிவித்தது.

ஆனால், ஃபிலீக்ஸ் மற்றும் தற்போதைய அதிபர் ஜோசப் கபிலா கூட்டு சதி செய்து தேர்தலில் அதிக வாக்குகள்  பெற்றுள்ளதாக ஆளுங்கட்சி தலைவரான மார்ட்டின் ஃபாயிலு குற்றச்சாட்டியதுடன், நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

 மார்ட்டின் ஃபாயிலு தலைமையிலான கட்சி 34.8 சதவீதம் வாக்குகளை பெற்றுள்ளதால், வாக்கு மறுஎண்ணிக்கை நடத்தப்பட வேண்டும் என்று தென்னாப்பிரிக்கா, அங்கோலா உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக்கும் தென்னாப்பிரிக்க  மேம்பாட்டு அமைப்பும் வலியுறுத்தியது.

இதையடுத்து,  இந்த விவகாரம் ஆப்பிரிக்க ஒன்றியத்துக்கு சென்றது. இதுதொடர்பாக  எத்தியோப்பியாவில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு பிறகு, மார்ட்டின் ஃபாயிலு எழுப்பியுள்ள சந்தேகங்களை கருத்தில் கொள்ள வேண்டியுள்ளதால், கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட தேர்தல் முடிவுகள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக ஆப்பிரிக்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எட்டப்படும் நோக்கில், உயர்நிலைக் குழு தலைநகர் கின்ஸஷாவுக்கு விரைந்துள்ளதாகவும் அந்த ஒன்றியம் அறிவித்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close